தபால் தலையைச் சுற்றி, ஓட்டைகள் காணப்படுகிறதே, இவை எப்படி தோன்றின?
நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன், லண்டன் நகரத்தில் ஒரு சத்திரத்தில், பத்திரிகை நிருபர் ஒருவர் உட்கார்ந்து, அன்றைய செய்திகளை எழுதி முடித்தார். வெளியூர் பத்திரிகைகளுக்கு, அந்தச் செய்திகள் உடனடியாகப் போய்ச் சேர வேண்டும். எழுதியவற்றை, அந்த நிருபர் அவசரம் அவசரமாக உறைகளில் போட்டு, வாயை ஒட்டினார்.
பையிலிருந்து, நீண்ட அகலமான காகிதத்தை எடுத்தார். அவை அத்தனையும், தபால் தலைகள். தனித்தனியாகக் கிழிப்பதற்குக் கத்தியைத் தேடினார். கத்தி கிடைக்காமல் போகவே, ஒரு குண்டூசியை எடுத்து, அதனால் கிழித்தார். கோணல் மாணலாகக் கிழிந்தது. எப்படியோ அதை ஒன்றாகச் சேர்த்து ஒட்டினார்.
சத்திரத்தில் இருந்த, ஹென்றி ஆர்க்சர் என்பவர், அந்த நிருபர் பட்ட பாட்டையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்.
தபால் தலைகளைச் சுற்றிலும் ஓட்டைகள் இருந்தால், கிழிப்பதற்குச் சுலபமாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.
அவரே தபால் தலைகளைச் சுற்றி, ஓட்டைகள் போட்டுத் தரக்கூடிய இயந்திரம் ஒன்றைத் தயாரித்தார். அதன் உதவியால், மிகுந்த பலன் கிடைக்கிறது என்பதை அறிந்த பிரிட்டிஷ் தபால் துறை, அந்த இயந்திரத்தை ஹென்றி ஆர்க்சரிடமிருந்து, விலை கொடுத்து வாங்கியது.
— "தபால் தலைகளின் கதை' நூலிலிருந்து...
Post a Comment